சுடச்சுட

    

    திருநெல்வேலியில் பஸ் பயணத்தின்போது செல்போனில் அதிக சப்தத்துடன் பாட்டு கேட்டதால் எழுந்த பிரச்னையில் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக 4 மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் நெல்லை சந்திப்பில் உள்ள பள்ளி, பேட்டை அரசு தொழிற்பயிற்சிக் கல்லூரியில் படித்துவருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் வடிவேல், முத்துமணி ஆகியோர் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து கங்கைகொண்டானுக்கு பஸ்ஸில் பயணம் செய்தனர்.

    அப்போது செல்போனில் அதிக சப்தத்துடன் பாட்டு கேட்டது தொடர்பாக அவர்களுக்கும், பிற மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் வடிவேலும், முத்துமணியும் தாக்கப்பட்டனர். இதுகுறித்து வடிவேல் கங்கைகொண்டான் போலீஸில் புகார் செய்தார். போலீஸார்  அப்பகுதியை சேர்ந்த 4 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    இவர்களில் ஒருவர் சந்திப்பு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வடிவேல், முத்துமணியை சந்தித்து, போலீஸில் புகார் அளித்தது தொடர்பாக கண்டித்தாராம். அப்போது அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் மாணவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai