சுடச்சுட

  

  டாக்டர், மனைவி கொலை: குற்றவாளிகளை உடனே கைது செய்ய மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்

  By dn  |   Published on : 04th December 2013 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டாக்டர் அருள், அவரது மனைவி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என, இந்திய மருத்துவக் கழகம், அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

  இந்திய மருத்துவக் கழக திருநெல்வேலி மாவட்டக் கிளை, தமிழ்நாடு அரசு  மருத்துவர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டக் கிளை நிர்வாகிகள் பங்கேற்ற  ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  இந்திய மருத்துவக் கழக திருநெல்வேலி மாவட்டத் தலைவர் டாக்டர் பிரேமசந்திரன் தலைமை வகித்தார். அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், மாவட்டச் செயலர் முகமதுரபீக், இந்திய மருத்துவக் கழக செயலர் வெங்கடேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் அழகேசன், இந்திய மருத்துவக் கழக அம்பாசமுத்திரம் கிளைத் தலைவர் கிருஷ்ணன், செயலர் டாக்டர் பத்மனாபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  கூட்டத்தில், அம்பாசமுத்திரம் டாக்டர் அருள், அவரது மனைவி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை காவல்துறை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தனியார் மருத்துவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும்,  திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai