சுடச்சுட

  

  டிச.6-ல் இந்து மகா சபை ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

  By dn  |   Published on : 04th December 2013 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் வரும் 6-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்து மகா சபையின் ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

  அகில பாரத இந்து மகா சபையின் சார்பில் வரும் 6-ஆம் தேதி மேலப்பாளையம்  சந்தைப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி காவல்நிலையத்தில் மனு அளித்திருந்தனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இடத்தை இந்து மகா சபையிடம் ஒப்படைக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தது.

  ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை.  இதுதொடர்பாக, மேலப்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக இந்து மகா சபைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக, இந்து மகா சபையின் மாநில இளைஞரணி துணைத் தலைவர் எஸ். கணேசன் கூறியது:

  வரும் 6-ஆம் தேதி பாளையங்கோட்டை மார்க்கெட் திடல், திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி நகரம், மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த ஒரு பிரிவினருக்கு அனுமதியளித்துவிட்டு, எங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர். இது தொடர்பாக இந்து மகா சபையின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai