சுடச்சுட

  

  பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத் திருவிழாவையொட்டி, புதுநன்மை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத் திருவிழா நவம்பர் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவ. 30-ம் தேதி இரவு அசன விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 9-ம் திருநாளான திங்கள்கிழமை மாலையில் தூய சவேரியார் சப்பரத்தில் எழுந்தருளி பவனி வந்தார்.

  10-ம் திருநாளான செவ்வாய்க்கிழமை பாதுகாவலரின் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலையில் நடைபெற்ற திருப்பலிக்கு தூய சவேரியார் கல்லூரியின் முதல்வர் எஸ்.ஜெ.கில்பர்ட் தலைமை வகித்தார். தமிழக இறையழைத்தல் பணிக்குழுவின் செயலர் ஜெ.சகாயஜான் மறையுரையாற்றினார்.

  அதன்பின்பு நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஆ.ஜூடு பால்ராஜ் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கி ஆசீர்வதித்தார். இதில், 50-க்கும் மேற்பட்டோர் புதுநன்மை பெற்றனர். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் திருப்பலியில் கலந்துகொண்டனர். மாலையில் நடைபெற்ற திருப்பலிக்கு நாலாட்டின்புதூர் பங்குத்தந்தை நிக்கோலாஸ் தலைமை வகித்தார். கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்தந்தை டைட்டஸ் மறையுரையாற்றினார். முடிவில் கொடியிறக்கப்பட்டது. இம்மாதம் 15-ம் தேதி காலை 7.30 மணிக்கு சிறப்புத்திருப்பலியும், உறுதிபூசுதலும் நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai