சுடச்சுட

  

  பாளையங்கோட்டையில் நடைபெற்ற தேசிய கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் ரூ.32 லட்சத்துக்கு பொருள்கள் விற்பனையாகியுள்ளன. ஆந்திர மகளிர் குழு அமைத்திருந்த ஸ்டாலுக்கு முதல்பரிசு வழங்கப்பட்டது.

  பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் தேசிய கைவினைப் பொருள்கள் கண்காட்சி நவம்பர் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. ஆந்திரம், கர்நாடகம் உள்பட 6 மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர் பங்கேற்று, 132 ஸ்டால்களில் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தனர். இக்கண்காட்சியில் 10 நாள்களில் மொத்தம் ரூ.32 லட்சத்திற்கு கைவினைப் பொருள்கள் விற்பனையாகியுள்ளன.

  வெளி மாநிலப் பிரிவில் ஆந்திரத்தைச் சேர்ந்த நித்காரியா சுயஉதவிக் குழு, விற்பனையில் முதலிடம் பிடித்தது. கர்நாடகத்தின் நீத்தி குழு 2-ம் இடத்தையும், புதுச்சேரியின் விநாயகா குழு 3-வது இடத்தையும் பெற்றன.

  தமிழக அளவில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரா மகளிர் சுயஉதவிக் குழு முதலிடமும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரணி மகளிர் சுயஉதவிக் குழு 2-ம் இடத்தையும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகரஒளி மகளிர் சுயஉதவிக் குழு 3-வது இடத்தையும் பெற்றன.

  நிறைவு விழாவுக்கு, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கோ.குருநாதன் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ.விஜயகுமார், சுயஉதவிக் குழுவினருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிப் பேசினார். புதுவாழ்வு திட்ட மாவட்ட மேலாளர் சம்பத்குமார், இந்தியன் வங்கி மேலாளர் முரளி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் இளமதி, பாளையங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai