சுடச்சுட

    

    பாளையங்கோட்டை அருகே போலீஸார் ரோந்து பணியில்  ஈடுபட்டபோது, போலி நம்பர் பிளேட்டுகள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் நின்ற  சொகுசு காரை பறிமுதல் செய்தனர். காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    பாளையங்கோட்டை அருகே சாந்திநகரில் திங்கள்கிழமை இரவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் நின்ற ஒரு சொகுசு காரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். மர்ம நபர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    போலீஸார் அந்த காரை சோதனை செய்ததில், காரில் போலியான எண்களுடன் 50  நம்பர் பிளேட்டுகள் மற்றும் அரிவாள், கடப்பாறை, கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.

    அந்த காரில் வந்தது யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. கார் நாகர்கோவிலை சேர்ந்தவருக்கு சொந்தமானது என்ற தகவல் மட்டும் கிடைத்துள்ளது. இது தொடர்பாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai