சுடச்சுட

  

  போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இணைப்புச் சாலைக்கு நிலம் தானம்

  Published on : 04th December 2013 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திட்ட சாலை இணைப்புக்கு தங்களது நிலத்தை தானமாக வழங்குவதாக மேலவீரராகவபுரத்தைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

  திருநெல்வேலி மாவட்டம், மேலவீரராகவபுரம் வார்டு 10-ல் பிளாக் 17-ல் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தரிசு நிலம் உள்ளது. இந்த நிலத்தை ராமகிருஷ்ண பிள்ளை, வைகுண்டம் பிள்ளை, பகவதி அம்மாள், ஆறுமுகம் பிள்ளை, சூசன், இசக்கியம்மாள், ராதாகுமாரி, பிச்சையா முதலியார், பொன்னையா, செல்வம், ரவிசங்கர், பிச்சுமணி, மரியதங்கம், பால்ராஜ், பெருமாள் ஆகிய 15 பேர் சேர்ந்து தானமாக வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

  பொதுமக்கள் நலனுக்காக அனைவரும் சேர்ந்து நடைபாதை மனையை தானமாக வழங்குவதாக மாநகராட்சி ஆணையரிடம் கையொப்பமிட்டு கடிதம் அளித்துள்ளனர்.

  இதுதொடர்பாக, நில உரிமையாளர்கள் கூறியது:

  ஸ்ரீபுரம் பேருந்து நிறுத்தத்தில் எஸ்.என். நெடுஞ்சாலை, தச்சநல்லூர் புறவழிச் சாலை, நெல்லை சந்திப்பு, இரு அடுக்கு மேம்பால சாலை ஆகியவை இணையும் பகுதியில் ரவுண்டானா அமைக்க மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது. தச்சநல்லூர் புறவழிச்சாலை எதிரே ஸ்ரீபுரம் சாலை உள்ளது. இதில், 60 அடி திட்ட சாலைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைந்தால் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து பாநாசம், தென்காசி, முக்கூடல் செல்லும் பேருந்துகள் அனைத்தும் 60 அடி சாலை வழியாக குறுக்குத்துறை சாலை வழியாகச் சென்றால் வாகன நெரிசல் இருக்காது.

  நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் பின்புறமும் புதிய இணைப்புச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் ரயில்களில் வரும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இதற்கு தீர்வு காண ஸ்ரீபுரம் சாலை வழியாகவும், குறுக்குத் துறை சாலை வழியாகவும் புதிய இணைப்புத் திட்ட சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்பட்டால் எஸ்.என். நெடுஞ்சாலை, ஸ்ரீபுரம் செல்ல சிரமம் இருக்காது. இதற்காக நெல்லை சந்திப்பு பாலம் காவல்நிலையம் பின்புறம் உள்ள தரிசு நிலத்தில் பொதுமக்களுக்காக நடைபாதை சாலை மனையை தானமாக வழங்குவதாக உள்ளோம் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai