சுடச்சுட

  

  திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழா, பாளையங்கோட்டையில் உள்ள கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

  விழாவுக்கு, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் டி.ஏ.பிரபாகர் தலைமை வகித்தார். மருத்துவர் மரியஜான் வரவேற்றார். புறநகர் ரோட்டரி சங்கச் செயலர் குமாரசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர் ராமகிருஷ்ணன் பேசினார். மாற்றுத்திறனாளி மாணவி பரமேஸ்வரிக்கு, மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. டாக்டர் மோசஸ் செல்வராஜ் நன்றி கூறினார்.

  பேரிடர் மேலாண்மைப் பயிற்சி: இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் திருநெல்வேலி கிளை சார்பில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி 2 நாள்கள் நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்-மாணவிகள், தொழிற்பயிற்சி மாணவர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.

   இந்திய செஞ்சிலுவைச் சங்க திருநெல்வேலி கிளைச் செயலர் மு.சொக்கலிங்கம் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் டி.ஏ.பிரபாகர் தலைமை வகித்தார். வைரவராஜன், ஜெபசிங், மருத்துவர் சுடலைமுத்து, அஜித் இனிகோ உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். ஜெபசிங் செல்வின் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai