சுடச்சுட

  

  பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  விழாவில், தலைமை குற்றவியல் நீதிபதி தங்கமாரியப்பன், சட்ட உதவி மைய நீதிபதி தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  விழாவுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி நசீர்அகமது தலைமை வகித்துப் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகளின் நலனில் முன்னேற்றம் ஏற்படுத்தும் நோக்கில்தான், மாற்றுத்திறனாளிகள் தினம் ஐ.நா. சபையால் உருவாக்கப்பட்டது.

  மாற்றுத்திறனாளிகள் திறமையாக செயல்படுகிறார்கள். அவர்களை கற்க வைத்து, அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வரும் ஆசிரியர்களின் சேவை மகத்தானது. பார்வையற்ற வழக்குரைஞர்கள் சிலர், நீதிமன்றங்களில் திறம்பட வழக்காடுகின்றனர். மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை சமூகம் அங்கீகரித்து ஊக்கப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவைப்படும் எவ்வித சட்டஉதவிகளையும், இலவசமாக செய்ய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தயாராக உள்ளது என்றார் அவர்.

  விழாவில், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ராமலிங்கம், கோபிநாதன், சுந்தரைய்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம், செயலர் ராஜேஸ்வரன், பள்ளித் தாளாளர் ஜெயசிங், பள்ளி முதல்வர் கிங்க்ஸ்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai