சுடச்சுட

  

  வண்ணார்பேட்டையில் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 9-வது வார்டு வண்ணார்பேட்டையில் சலவையாளர் சமூகத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த சமூகத்துக்குள்பட்ட தங்கம்மன் கோவிலானது, அப்பர் சுவாமிகள் தெருவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக் கோவிலுக்கு செல்ல மாநகராட்சி சார்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.

  இச்சாலை அமைக்கும்போது புறம்போக்கு இடத்தில் குடியிருக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சாலை அமைத்த பின் சாலையிலேயே கார் செட் அமைத்தும், போர்வெல் அமைத்தும் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்குச் செல்வதற்கு இடையூறாக உள்ளது. இதுதொடர்பாக, மாநகராட்சியிடம் 5 மாதங்களுக்கு முன்பே மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி கோவில் வழிபாடுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்த் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai