சுடச்சுட

    

    ஊதிய ஒப்பந்தம்: முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் தொடக்கம்

    By திருநெல்வேலி  |   Published on : 05th December 2013 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்கக் கோரி தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியூசி தொழிலாளர் சங்கம் தொடங்கியுள்ளது.

    திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்று அஞ்சல் அட்டை அனுப்பும் பணியை சங்கத் தலைவர் எல். குருசாமி, பொதுச்செயலர் ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் புதன்கிழமை தொடக்கி வைத்தனர்.

    அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து ஒப்பந்தம் பேசி முடிக்க வேண்டும் என அந்த அஞ்சல் அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில், சங்கப் பொருளாளர் சங்கரநாராயணன், துணைப் பொதுச்செயலர் உலகநாதன், செயலர்கள் சண்முகம், முருகன், சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai