சுடச்சுட

  

  :எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களை நாம் அரவணைக்க வேண்டும் என்றார் நீதிபதி தமிழரசி.

  திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி எம்.நசீர்அகமது உத்தரவின்பேரில் சட்ட உதவி மையம், தொழிலாளர் நலத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை சார்பில் எய்ட்ஸ் தின விழா ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. வழக்குரைஞர் தமீம்அன்சாரி வரவேற்றார். நிகழ்ச்சியில் சட்ட உதவி மைய நீதிபதி தமிழரசி பேசியதாவது:

  எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். எய்ட்ஸ் குறித்து முழுமையாக நாம் ஒவ்வொருவரும் அறிந்திட வேண்டும். அறிந்ததை தம் குடும்பம், உறவினர்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும். எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களை நாம் அரவணைக்க வேண்டும். அவர்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டும் என்றார் அவர்.

  மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் அமலவளவன், சட்ட உதவி மைய வழக்குரைஞர்கள் சிதம்பரம், சிவசுப்பிரமணியன், வள்ளிநாயகி, மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் வளர்ச்சி பிரிவு (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) முருகன், தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் வேல்முருகன், ஏ.ஆர்.டி. அமைப்பின் மருத்துவர் பஷீர் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai