சுடச்சுட

    

    கிறிஸ்துமஸ் பண்டிகை ரூ. 7.50 கோடிக்கு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை இலக்கு

    By திருநெல்வேலி  |   Published on : 05th December 2013 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல் வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் அடங்கிய திருநெல்வேலி மண்டலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரூ. 7.50 கோடி மதிப்பில் கைத்தறி துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் கோ.ரா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    திருநெல்வேலி சந்திப்பு காந்திமதி கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை விற்பனையை திருநெல்வேலி திருமண்டல பேராயர் ஜெ.ஜெ. கிறிஸ்துதாஸ் குத்துவிளக்கு ஏற்றி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

    முதல் விற்பனையை புத்தக விற்பனை நிலைய உரிமையாளர் சி. சௌந்தராஜ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் திருமண்டல பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி கிறிஸ்டில்லா, கோஆப்டெக்ஸ் மேலாளர்கள் எம். கணபதி, எஸ். வைத்தியலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

    அப்போது கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் கோ.ரா. சுப்பிரமணியன் கூறியதாவது: இந்தியாவில் 203 விற்பனை நிலையங்களுடன் கோ-ஆப்டெக்ஸ் இயங்கி வருகிறது. கடந்த 2012-13 ஆம் நிதியாண்டில் கோ-ஆப்டெக்ஸ் ரூ. 244.61 கோடிக்கு கைத்தறி துணிகளை விற்பனை செய்தது.

    திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் அடங்கிய திருநெல்வேலி மண்டலத்தில் நிகழாண்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ. 16.80 கோடிக்கு கைத்தறி துணிகளை விற்பனை செய்து இந்திய அளவில் முதலிடம் பெற்றது. திருநெல்வேலி காந்திமதி விற்பனை நிலையம் ரூ. 3.94 கோடிக்கு கைத்தறி துணிகளை விற்பனை செய்து இந்திய அளவில் 2-வது இடம் பெற்றது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மண்டலத்தில் ரூ. 7.50 கோடி மதிப்பில் கைத்தறி துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகையையொட்டி வாடிக்கையாளர்களின் ரசனை, புதிய வடிவமைப்பில் கைத்தறி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai