சுடச்சுட

  

  குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணி பரிந்துரை பட்டியலைப் பார்க்க இன்று வாய்ப்பு

  By திருநெல்வேலி,  |   Published on : 05th December 2013 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கு பரிந்துரை செய்யப்படும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானோர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது.

  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் காலியாகவுள்ள 86 இளநிலை உதவியாளர் பணிகளைப் பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பு பதிவுதாரர்கள் பட்டியல் கோரப்பட்டுள்ளது.

  இந்தப் பணியிடத்துக்கு பிஎஸ்.சி. கணினி அறிவியல், பி.சி.ஏ., தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக கம்ப்யூட்டர் பட்டப்பிடிப்பு படித்தவர்கள் தகுதியானவர்கள்.1.7.2013-ம் தேதி ஆதிதிராவிடர், அருந்ததியினர் 35 வயதுக்குள்ளும், எம்.பி.சி., பி.சி. பிரிவினர் 32 வயதுக்குள்ளும், பொதுப் பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

  ஆதிதிராவிடர், அருந்ததியர் பதிவு மூப்பு- 26.4.2007, பழங்குடியினத்தவர்- 22.7.2008, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்- 9.8.2004, பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) 26.8.2004, பிற்பட்ட மற்றும் இதர வகுப்பினர் 21.6.2004 என்ற அடிப்படையில் பதிவு மூப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இத்தகைய தகுதியுடையோர் தங்களது பரிந்துரையை உறுதி செய்ய திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வியாழக்கிழமை நேரில் வர வேண்டும். வரும்போது அடையாள அட்டை, கல்விச் சான்று, குடும்ப அட்டை நகல்களை எடுத்து வருமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai