சுடச்சுட

  

  துணைத் தலைவர், உறுப்பினர்கள் இல்லாமல் ஊராட்சிக் கூட்டம்: தலைவி மீது புகார்

  By திருநெல்வேலி,  |   Published on : 05th December 2013 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஊத்துமலையில் துணைத் தலைவர், 6 உறுப்பினர்கள் இல்லாமல் ஊராட்சித் தலைவி கூட்டம் நடத்தி நிறைவேற்றிய தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

  ஆலங்குளம் ஒன்றியம், ஊத்துமலை ஊராட்சி 12 உறுப்பினர்களைக் கொண்டது. இந்த ஊராட்சித் தலைவியாக கே. வள்ளியம்மாள். துணைத் தலைவராக சி. குட்டித்துரை, மற்றும் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  இதனிடையே புதன்கிழமை துணைத் தலைவர் சி. குட்டித்துரை மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டத்துக்கு வருவதற்கு முன்பே கூட்டத்தை நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றியதாகக் கூறப்படுகிறது.

  இதுகுறித்து துணைத் தலைவர் சி. குட்டித்துரை மற்றும் 6 உறுப்பினர்கள் ஆட்சியர், ஊராட்சிகளின் உதவி இயக்குநரை சந்தித்து அளித்த மனு:

  ஊத்துமலையில் தலைவி, அவரது கணவர் விதிகளுக்கு முரணாக ஊராட்சி நிதியை பயன்படுத்த துணைத் தலைவருக்கு நிர்பந்தம் செய்கின்றனர். அதற்கு உடன்படாததால் துணைத் தலைவர் குறித்து மக்களிடம் தவறான கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில் புதன்கிழமை (டிச.4) நடைபெற்ற ஊராட்சி கூட்டத்துக்கு புதன்கிழமை காலையில்தான் அஜண்டா வழங்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு துணைத் தலைவர், 6 உறுப்பினர்கள் செல்வதற்கு முன்பாகவே தலைவி, தீர்மானங்களை நிறைவேற்றி, கூட்டம் முடிந்து விட்டது என தெரிவித்தாராம்.

  எனவே துணைத் தலைவர், 6 உறுப்பினர்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai