சுடச்சுட

  

  நஷ்டஈடு வழங்காததால் இன்ஸ்பெக்டர் ஜீப் ஜப்தி

  By சங்கரன்கோவில்,  |   Published on : 05th December 2013 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  :விபத்தில் காயமடைந்த தம்பதிக்கு நஷ்டஈடு வழங்காத வழக்கில், சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டரின் ஜீப் ஜப்தி செய்யப்பட்டது.

  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள இடையன்குளத்தைச் சேர்ந்தவர் நக்கீரர். இவர் தன் மனைவி இசக்கியம்மாளுடன் 4.11.2008-ல் பைக்கில் சங்கரன்கோவிலிலிருந்து கரிவலம்வந்தநல்லூருக்கு சென்றார். அப்போது போலீஸ் ஜீப் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த தலைமைக் காவலர் முத்தையா மகன் சேதுராமலிங்கம் ஜீப்பை ஓட்டினாராம். விபத்தில் காயமடைந்த தம்பதி நஷ்டஈடு கோரி சங்கரன்கோவில் சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நக்கீரருக்கு ரூ. 3,13,100-ம், இசக்கியம்மாளுக்கு ரூ.1,38,512-ம் வழங்க நீதிமன்றம் 15.2.2012-ல் உத்தரவிட்டது. ஆனால் அத் தொகை போலீஸாரால் வழங்கப்படவில்லை.

  இதையடுத்து, நிறைவேறுதல் மனு மீண்டும் சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, நக்கீரருக்கு ரூ. 3,94,499-ம், இசக்கியம்மாளுக்கு ரூ. 1,72,809-ம் வழங்க உத்தரவிட்டார். அதன் பிறகும் அவர்களுக்குப் தொகை வழங்கப்படவில்லை. இதனால், சங்கரன்கோவில் தாலுகா இன்ஸ்பெக்டரின் ஜீப்பை ஜப்தி செய்ய சார்பு நீதிமன்ற நீதிபதி சரவணக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து சார்பு நீதிமன்ற ஊழியர்கள் கோகிலா, ராஜா ஆகியோர் புதன்கிழமை சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்திலிருந்த ஜீப்பை பறிமுதல் செய்தனர். அப்போது நீதிமன்ற ஊழியர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai