சுடச்சுட

  

  திருநெல்வேலியில் சுற்றித்திரிந்த 2 சிறுவர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு மீட்டு பெற்றோரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர்.

  திருநெல்வேலி மாநகர நெடுஞ்சாலை ரோந்து காவலைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அமிர்தராஜ், தலைமைக் காவலர் கிருஷ்ணன், காவலர் காளிராஜ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் ரவுண்டானா அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், தென்காசி கன்னி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சுசி சுந்தர பாரதி (15), அதே தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஆனந்தராமன் (16) என்பதும், பள்ளியில் படிக்கப் பிடிக்காமல் தப்பி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவர்கள் இருவரும் அவர்களது பெற்றோரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டனர்.

  நெடுஞ்சாலை ரோந்து காவல் குழுவினரின் செயலை, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சுமித்சரண், காவல் துறை ஆணையர்கள் டி.பி.சுரேஷ்குமார் (சட்டம்-ஒழுங்கு), ஈ.டி.சாம்சன் (குற்றம்-போக்குவரத்து) ஆகியோர் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai