Enable Javscript for better performance
நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு ரூ.43 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு ரூ.43 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி

    By திருநெல்வேலி,  |   Published on : 05th December 2013 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் வரும் ஆகஸ்ட்டில் நிறைவுபெறும் என கல்லூரி முதல்வர் சே. பிரதாபன் தெரிவித்தார்.

    திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் மேலும் கூறியது: இக் கல்லூரி தொடங்க கடந்தாண்டு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன்படி, கடந்தாண்டு 40 பேரும், இந்தாண்டு 40 பேரும் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். தாற்காலிகமாக ஸ்ரீபுரத்தில் உள்ள கட்டடத்தில் கல்லூரி இயங்கி வருகிறது.

    ராமையன்பட்டியில் ரூ.43 கோடியில் கல்லூரிக்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடைபெறுகிறது. இதில், ரூ.10 கோடி ஒதுக்கீட்டில் நடைபெற்ற முதல் கட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நிர்வாகம், முதலாமாண்டு வகுப்பறைகள், முதல்வர் அறை உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளதால், கல்லூரி விரைவில் ராமையன்பட்டிக்கு மாற்றம் செய்யப்படும். 2ஆவது கட்டமாக மாணவர், மாணவிகளுக்கான விடுதிகள், விளையாட்டு மைதானம், ஆய்வுக் கூடம், நிர்வாக அலுவலகம், மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் ஜனவரியில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் நிறைவு பெறும்.

    40 ஏக்கரில் பசுந்தீவனம்: பசுந்தீவனம் உற்பத்தியை அதிகரித்து கால்நடைகளின் தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ரூ.65 லட்சத்தில் 40 ஏக்கரில் பசுந்தீவன பண்ணை தொடங்கப்பட்டது. விரைவில் விவசாயிகளுக்கு விதைகளும், நாற்றுகளும் வழங்கப்படும்.

    நிகழாண்டு முதல்  இம் மாவட்டத்தில் தமிழக அரசின் ரூ.85 லட்சம் உதவியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் விவசாயிகளுக்கு சுழற்சி முறையில் நாட்டுக் கோழிகள் வழங்கப்படும். குஞ்சு பொரிப்பகமும் ஏற்படுத்தப்படும்.

    கோமாரி இல்லை: மாவட்டத்தில் கோமாரி நோய் தாக்குதல் இல்லை. எந்தப் பகுதியிலும் நோய் அறிகுறிகள் கண்டறியப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளகாவே கோமாரி நோய் தடுப்பூசி அளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்றார் அவர்.

    பேராசிரியர் சி. மணிவண்ணன், உதவிப் பேராசிரியர் எஸ். செந்தில்குமார் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai