சுடச்சுட

  

  நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆய்வுக்காக திறக்கப்பட்ட ஊனமுற்றோர் "கவுன்ட்டர்

  By 'திருநெல்வேலி  |   Published on : 05th December 2013 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஊனமுற்றோருக்காகத் திறக்கப்பட்ட முன்பதிவு மையம் பொது மேலாளர் ஆய்வுக்காக புதன்கிழமை திறக்கப்பட்டது.

  திருநெல்வேலி எம்.பி. முயற்சியால் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஊனமுற்றோர், முதியோர், இலவச பாஸ் வைத்திருப்போருக்கான முன்பதிவு செய்யும் கவுன்ட்டர் 6 மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது.

  திறக்கப்பட்ட சில நாள்கள் மட்டும் இயங்கியது. பின்னர், மூடப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது. எப்போதாவது ஒருநாள் திறந்திருந்தாலே அபூர்வம் என்ற நிலையில், புதன்கிழமை (டிச.4) இந்த கவுன்ட்டர் திறக்கப்பட்டிருந்தது.

  ரயில்வே திட்டப் பணிகள் ஆய்வுக்காக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா வருகையைத் தொடர்ந்து இந்த கவுன்ட்டர் திறக்கப்பட்டது. இதுதொடர்பாக, செய்தியாளர்கள் தரப்பில் பொதுமேலாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

  அதற்கு அவர் அளித்த பதில்: தெற்கு ரயில்வே பணிகளில் பல்வேறு பிரிவுகளில் ஆள்கள் பற்றாக்குறை உள்ளது.

  மேலும், டிக்கெட் வழங்கும் பிரிவில் ஒருவர் 180 பயணச்சீட்டுகளை வழங்கும் வகையில் பணிபுரிந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அங்கு ஆள்கள் நியமிக்கப்படமாட்டார்கள்.

  திருநெல்வேலியில் கூட்டம் அதிகமாக இருந்து ஊனமுற்றோருக்கான சிறப்பு கவுன்ட்டர் இயங்காமல் இருந்தால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai