சுடச்சுட

    

    "நெல்லை மாவட்டத்தில் 21 இடங்களில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்'

    By திருநெல்வேலி  |   Published on : 05th December 2013 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் 21 மையங்களில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

    இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக டிச. 3-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டார். இதற்காக திருநெல்வேலி மாவட்டத்துக்கு ரூ. 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இம்மாவட்டத்தில் செயல்படும் 14 பகல் நேர பாதுகாப்பு மையங்கள், 21 ஆதார வள மையங்களில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலப்பாளையம் குறிச்சி பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஆர். ஜெயபாண்டி கலந்துகொண்டார். ஏற்பாடுகளை கல்வி ஒருங்கிணைப்பாளர் சு.ரமேஷ் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai