Enable Javscript for better performance
பைக்-கார் மோதல்: அரசு பஸ் நடத்துநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பைக்-கார் மோதல்: அரசு பஸ் நடத்துநர் சாவு

    By திருநெல்வேலி  |   Published on : 05th December 2013 03:47 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலியில் புதன்கிழமை இரவு பைக்-கார் மோதிய விபத்தில் அரசு பஸ் நடத்துநர் இறந்தார்.

    பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரில் உள்ள மகாராஜா பிள்ளை தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் செல்வராஜ் (54). அரசு பஸ் நடத்துனராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு பணிமனையிலிருந்து தனது பைக்கில், புதிய பஸ் நிலையம் நோக்கி அவர் சென்று கொண்டிருந்தாராம்.

    அப்போது குறிச்சி அருகே பைக்கும், காரும் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த செல்வராஜை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இளைஞர் தற்கொலை: பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்த முத்துப்பிள்ளை மகன் செல்வம் (26). இவர், கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தாராம். இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தார். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    kattana sevai