சுடச்சுட

  

  மாவட்ட பூப்பந்தாட்ட அணிக்கு டிச. 8-ல் வீரர், வீராங்கனைகள் தேர்வு

  By திருநெல்வேலி  |   Published on : 05th December 2013 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்ட அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு திருநெல்வேலியில் இம்மாதம் 8-ம் தேதி நடைபெறுகிறது.

  இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்டக் கழகத்தின் செயலர் பி.வெள்ளைப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: சீனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் கரூரில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரில் 2014-ம் ஆண்டு ஜனவரி 4, 5-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில, திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்ட சீனியர் அணி சார்பில் கலந்துகொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு இம்மாதம் 8-ம் தேதி திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai