சுடச்சுட

  

  மேலப்பாளையம், பாளை.யில் இன்று முதல் குடிநீர் விநியோகம் பாதிப்பு

  By திருநெல்வேலி  |   Published on : 05th December 2013 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மற்றும் பாளையங்கோட்டை மண்டலப் பகுதிகளில் வியாழக்கிழமை முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  இதுதொடர்பாக மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் பி.அனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேலப்பாளையம் மண்டலம், கருப்பந்துறை பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து மேலப்பாளையம் மண்டலத்திற்கு உள்பட்ட மேலப்பாளையம் ஜின்னாதிடல், மேலநத்தம் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யும் பிரதான குழாய்கள் தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பழுதடைந்துவிட்டது. இதனை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. எனவே, மேலப்பாளையம் மண்டலம் வார்டு எண்கள் 31, 32, 33, 34, 35, 36, 37, 38 ஆகியவற்றில் ஒரு சில பகுதிகளில் இம் மாதம் 5, 6-ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் செய்ய இயலாது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  பாளையங்கோட்டை: பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் ஆ.பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மணப்படை வீடு தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள பம்பு பழுதடைந்துள்ளதால், பழுது நீக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பாளையங்கோட்டை மண்டலத்திற்குள்பட்ட வார்டு எண்கள் 13, 14, 15, 16, 20, 21, 22, 23, 24, 25-ல் உள்ள பகுதிகளுக்கு 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும். எனவே, பொதுமக்கள் கிடைக்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai