சுடச்சுட

  

  ரூ.2 கோடியில் மேலப்பாளையம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி

  By திருநெல்வேலி,  |   Published on : 05th December 2013 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியை அடுத்துள்ள மேலப்பாளையம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் வகையில் ரூ.2 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன.

  இதற்கான அடிக்கல் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா அடிக்கல் நாட்டினார். மேற்கூரையுடன் நடை மேடை அமைத்தல், கூடுதல் நடைபாதை, இரு வழித் தடம், ரயில்கள் நின்று செல்லும் வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார். திருநெல்வேலி எம்.பி. ராமசுப்பு முன்னிலை வகித்தார். ரயில்வே கோட்ட மேலாளர்கள் ஏ.கே. ரஸ்தோரி (மதுரை), ராகேஷ் அகர்வால் (திருவனந்தபுரம்), ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் அமீர்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  19 பெட்டிகள் ரயில்: திருநெல்வேலியிலிருந்து- திருவனந்தபுரம் வரையில் உள்ள ரயில்வே திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா வந்த ரயிலானது 19 பெட்டிகள் கொண்டதாக இருந்தது. இதில், பல்வேறு வகை தொழில்நுட்பப் பணியாளர்கள், உதவியாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். மேலும், ஆய்வுக் குழுவினருக்கு உணவு தயாரித்து வழங்க சமையலர்களுடன் கூடிய சிறப்பு சமையல் கூடமும் இந்த ரயிலில் இடம் பெற்றிருந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai