சுடச்சுட

  

  :தச்சநல்லூர் அருகே டீ வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கட்டுடையார்குடியிருப்பைச் சேர்ந்தவர் செங்கோட்டை நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.

  தச்சநல்லூர் அருகேயுள்ள கரையிருப்பைச் சேர்ந்த சுப்பையா என்ற பரதேசி மகன் பால்பாண்டி (55). இவர், தனது முதல் மனைவியான நயினார்குளத்தைச் சேர்ந்த சிதம்பரத்தின் தந்தை அருணாசலத்தை கொலை செய்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். சிறை தண்டனை முடிந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் வெளியே வந்த பால்பாண்டி, டீ வியாபாராம் செய்து வந்தார். இதையடுத்து தச்சநல்லூரைச் சேர்ந்த புஷ்பலீலாவை அவர் 2-வதாக திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

  இந்நிலையில் அக். 1-ம் தேதி டீ வியாபாரம் செய்து கொண்டிருந்த பால்பாண்டி, தச்சநல்லூர் சிதம்பரநகர் பகுதியில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தச்சநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து அண்ணாதுரை உள்பட 5 பேரை  கைது செய்தனர். இவ் வழக்கு தொடர்பாக கட்டுடையார்குடியிருப்பைச் சேர்ந்த மாரியப்பன், செங்கோட்டை நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai