சுடச்சுட

    

    ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும்

    By திருநெல்வேலி  |   Published on : 06th December 2013 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக, திருநல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாநில சட்டக் குழுத் தலைவர் ப. ராஜ்குமார் பேசியதாவது: குற்றாலத்தில் இம் மாதம் 22-ம் தேதி கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழு கூடுகிறது. இதில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளை பங்கேற்கச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மாவட்டந்தோறும் கூட்டம் நடத்தப்படுகிறது. மாநிலச் செயற்குழுவில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து திரளானோர் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.

    திருநெல்வேலி மாவட்டச் செயலர் எம். யாக்கோபு வரவேற்றார். மாநிலப் பொருளாளர் பொன். ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலர்கள் செ. முருகன் (திருநெல்வேலி), முத்து (தூத்துக்குடி), மாவட்டத் தலைவர்கள் சாமி, முத்துப்பாண்டி உள்ளிட்ட 2 மாவட்ட நிர்வாகிகள் பலர் பேசினர்.

    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி குடும்பன், கலாடி, மூப்பன், வாதிரியான் ஆகிய உள்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும்.

    தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் கோபாலசமுத்திரம், ஓமநல்லூர், சுத்தமல்லி, சத்திரம்புதுக்குளம் பகுதிகளில் அண்மையில் கொலையுண்டோரின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ. 5 லட்சம் நிதி வழங்க வேண்டும்.

    கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். திருநெல்வேலி மாவட்டம், மானூர் பெரியகுளம், பள்ளமடை குளங்களை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நீராதாரத்தைப் பெருக்க வேண்டும். இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai