சுடச்சுட

    

    இந்து முன்னணி பேட்டை நகரம் சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இந்து முன்னணி மாவட்டத் தலைவர் டி. பாலாஜி கிருஷ்ணசுவாமி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் பி. வெட்டும்பெருமாள், மாவட்டச் செயலர் வேல். ஆறுமுகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். சட்டநாதன், வி.ஆர். கைலாஷ்குமார், எஸ். துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     பேட்டை நகரத் தலைவர் எம்.பி. வினோத் வரவேற்றார். மாநில பேச்சாளர் எஸ்.கே. மணிவாசகம், தூத்துக்குடி மாவட்டப் பொதுச் செயலர் பி. சக்திவேல் ஆகியோர் பேசினர்.

     பேட்டை நகர் பகுதிக்கு உள்பட்ட 6 வார்டுகளிலும் 17 நபர் பூர்ண கமிட்டி அமைப்பது, அனைத்து வார்டுகளிலும் இந்து முன்னணி பெயர் பலகை வைப்பது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

     பயிற்சி முகாமில் நகர துணைத் தலைவர்கள், நகரச் செயலர்கள், நகரப் பொருளாளர்  உள்பட பலர் கலந்துகொண்டனர். நகரப் பொதுச்செயலர் எம். ஐயப்பன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai