சுடச்சுட

    

    "உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்'

    By திருநெல்வேலி,  |   Published on : 06th December 2013 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கீழ் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் (எல்.சி.ஓ.) உரிமம் மற்றும் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் (பி.எல்.சி.) உரிமம் வழங்கும் நடைமுறைகள் இப்போது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதன்படி ஜ்ஜ்ஜ்.ற்ஹஸ்ரீற்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் "மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், 11 மாங்காடு சாமி தெரு, நுங்கம்பாக்கம், சென்னை-600 034' என்ற முகவரிக்கு பதிவஞ்சல் அனுப்பினால் போதும்.

    உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் (எல்.சி.ஓ.) உரிமம் பெற்று நடத்த விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், அஞ்சலக உரிமம், பதிவுக் கட்டணம் ரூ. 1,000-க்கான வங்கி வரைவோலை, 3 மாத முன் வைப்புத்தொகைக்கான வங்கி வரைவோலை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். தனியார் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் (பி.எல்.சி.)உரிமம் பெற்று நடத்த விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், அஞ்சலக உரிமம், சேவை வரி பதிவுச் சான்று, 3 மாத முன்வைப்புத்தொகைக்கான வங்கி வரைவோலை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

    மேலும், ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் மாதாந்திர கட்டணத் தொகை செலுத்துவோர் 1.1.2014 முதல் கண்டிப்பாக ஆன்லைன் (நெட் பேங்கிங்) மூலமாக மட்டுமே செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், முன்னதாக 2013 டிசம்பரிலிருந்தே இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.திருநெல்வேலி, டிச. 5: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கீழ் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் (எல்.சி.ஓ.) உரிமம் மற்றும் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் (பி.எல்.சி.) உரிமம் வழங்கும் நடைமுறைகள் இப்போது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன.  விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் "மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், 11 மாங்காடு சாமி தெரு, நுங்கம்பாக்கம், சென்னை-600 034' என்ற முகவரிக்கு பதிவஞ்சல் அனுப்பினால் போதும்.

    உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் (எல்.சி.ஓ.) உரிமம் பெற்று நடத்த விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், அஞ்சலக உரிமம், பதிவுக் கட்டணம் ரூ. 1,000-க்கான வங்கி வரைவோலை, 3 மாத முன் வைப்புத்தொகைக்கான வங்கி வரைவோலை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். தனியார் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் (பி.எல்.சி.)உரிமம் பெற்று நடத்த விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், அஞ்சலக உரிமம், சேவை வரி பதிவுச் சான்று, 3 மாத முன்வைப்புத்தொகைக்கான வங்கி வரைவோலை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

    மேலும், ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் மாதாந்திர கட்டணத் தொகை செலுத்துவோர் 1.1.2014 முதல் கண்டிப்பாக ஆன்லைன் (நெட் பேங்கிங்) மூலமாக மட்டுமே செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், முன்னதாக 2013 டிசம்பரிலிருந்தே இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai