சுடச்சுட

  

  களக்காடு காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு: 16-ல் தொடக்கம்

  By களக்காடு,  |   Published on : 06th December 2013 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  களக்காடு புலிகள் காப்பகத்தில் 3-வது தேசிய புலிகள் கணக்கெடுக்கும் பணி இம் மாதம் 16-ம் தேதி தொடங்கவுள்ளதாக, துணை இயக்குநர் க. சேகர் புதன்கிழமை தெரிவித்தார்.

  நாடு முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு ஆண்டுதோறும் மார்ச்சில் நடைபெறும். நிகழாண்டு இம் மாதம் 16-ம் தேதி தொடங்கி 22 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

  இக் காப்பகத்தில் உள்ள களக்காடு, திருக்குறுங்குடி, மேல கோதையாறு ஆகிய வனச் சரகங்களில் புலிகள், பிற விலங்கினங்கள், தாவர வகைகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக வன ஆர்வலர்கள், வனத் துறைப் பணியாளர்கள் பங்கேற்ற பயிற்சி முகாம் களக்காடு தலையணை அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

  துணை இயக்குநர் க. சேகர் தலைமை வகித்தார். வனச் சரகர்கள் களக்காடு நடராஜன், திருக்குறுங்குடி பொன்ராஜ், வனவர்கள் அப்துல்ரஹ்மான், சிவகுமார், தங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேட்டைத் தடுப்புக் காவலர்கள், வன ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

  இது குறித்து புலிகள் காப்பக துணை இயக்குநர் க. சேகர் கூறியதாவது:

  கணக்கெடுப்புப் பணிக்காக களக்காடு வனச் சரகத்தில் 8, திருக்குறுங்குடி வனச் சரகத்தில் 7, மேல கோதையாறு வனச் சரகத்தில் 4 என மொத்தம் 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் ஒரு வனக் காப்பாளர் அல்லது வனக் காவலர், 2 வேட்டைத் தடுப்புக் காவலர்கள், விலங்கியல் பயின்ற தன்னார்வத் தொண்டர் என 4 பேர் இடம்பெறுவர்.

  இக் குழுவினர் வனப் பகுதியில் தங்கி புலிகள், பிற விலங்கினங்களின் கால்தடம், எச்சம், நேரடியாக கண்டறிதல் மூலம் கணக்கெடுப்பு நடத்துவர் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai