Enable Javscript for better performance
சிவகிரியில் துப்புரவுத் தொழிலாளி அடித்துக் கொலை: மருமகன் கைது- Dinamani

சுடச்சுட

    

    சிவகிரியில் துப்புரவுத் தொழிலாளி அடித்துக் கொலை: மருமகன் கைது

    By சிவகிரி  |   Published on : 06th December 2013 02:50 AM  |   அ+அ அ-   |    |  

    சிவகிரியில் வியாழக்கிழமை அதிகாலை துப்புரவுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, அவரது மருமகனை போலீஸார் கைதுசெய்தனர்.

    சிவகிரி பாலகணேசன் தெருவைச் சேர்ந்த ராக்கமுத்து மகன் மாரியப்பன் (32) . அதே  பகுதியைச் சேர்ந்த இவரது சகோதரி மகன் தங்கராஜ் (19). இருவரும், தேவிபட்டணம் ஊராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களாக வேலை செய்துவந்தனர்.புதன்கிழமை இரவு, மாரியப்பன் தன் தாயார் முனியம்மாளிடம் செலவுக்குப் பணம் கேட்டு துன்புறுத்தினாராம். இதை, முனியம்மாள் தன் பேரன் தங்கராஜிடம் கூறி  வருந்தினாராம். இதையடுத்து, வியாழக்கிழமை அதிகாலை சிவகிரி நாடார் கடை பஜாரில் நின்றுகொண்டிருந்த மாரியப்பனை தங்கராஜ் கண்டித்தாராம். இதில் இருவருக்குமிடையே  வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ், மாரியப்பனைக் கம்பால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து, சிவகிரி போலீஸார் வழக்குப் பதிந்து தங்கராஜை கைதுசெய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai