சுடச்சுட

  

  "சைவ சித்தாந்தபயிற்சி வகுப்புக்கு மாணவர் சேர்க்கை'

  By திருநெல்வேலி  |   Published on : 06th December 2013 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  :பாளையங்கோட்டை சைவ சபையில், என்ஜிஓ மையம் சார்பில் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

  அமைப்பாளர் பெ. கணபதி வரவேற்றார்.  உமாபதி சிவாச்சாரியாரின் சித்தாந்த அட்டக நூல் தகவல்கள் குறித்து பேராசிரியர் பா. முத்துசாமி விளக்கினார். சங்கர், செல்வம், மல்லிகா ஆகியோர் மாகேசுவர பூஜை நடத்தினர். மைய நிறுவனர் சுந்தர சுப்பிரமணியம், கண்ணன், பெரியசுவாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இதுகுறித்து அமைப்பாளர் பெ. கணபதி கூறுகையில், திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்தப் பயிற்சியின் அடுத்தத் தொகுப்பு 2014 ஜனவரியில் தொடங்கப்பட உள்ளது. மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2 ஆண்டுகள் பயிற்சி பெறுவோருக்கு சைவ சித்தாந்த பட்டம் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 0462-2552736 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai