சுடச்சுட

  

  பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ஆம் தேதியை முன்னிட்டு  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் மோப்ப நாய் உதவியுடன் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

  ரயில்வே காவல் துறை, ரயில்வே பாதுகாப்புப் படை, சட்டம்-ஒழுங்குப் பிரிவு, ஆயுதப்படை, சிறப்புக் காவல் படை, அதிரடிப்படை, மாவட்டத்தின் அனைத்துக் காவல் நிலைய போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

  மசூதிகள், கோயில்கள், தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி சந்திப்புப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 6) பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதால் அந்தப் பகுதிகளிலும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படவுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai