சுடச்சுட

  

  நெல்லை, ஆலங்குளத்தில் 403 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகள்

  By திருநெல்வேலி  |   Published on : 06th December 2013 02:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மற்றும் ஆலங்குளத்தில் நடைபெற்ற பட்டா மாறுதல் ஆணை வழங்கும் முகாமில் 403 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளை ஆட்சியர் மு. கருணாகரன் வழங்கினார்.

  திருநெல்வேலி வட்டத்துக்கான விரைவு பட்டா மாறுதல் முகாம் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இம்முகாமில் 1,028 மனுக்கள் பெறப்பட்டன. இதில், உள்பிரிவு இல்லாதவற்றில் 370 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதியானோருக்கு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 

  திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 370 பேருக்கு ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்.

  ஆலங்குளம்: முன்னதாக ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விரைவு பட்டா மாறுதல் முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர் இந்த முகாமில், பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்ததில் தகுதியானவை எனக் கருத்தப்பட்ட உள்பிரிவு செய்து 8 தனிப் பட்டாக்களும், 25 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகளையும் வழங்கினார்.

  மேலும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் 14 பேருக்கு தலா ரூ. 8 ஆயிரமும், இருவருக்கு தலா ரூ. 10 ஆயிரமும் வழங்கப்பட்டது. 16 பேருக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 1.16 லட்சமும் வழங்கப்பட்டது.

  முகாமில், ஆலங்குளம் எம்எல்ஏ ராஜேந்திரன், பேரூராட்சித் தலைவர் சொக்கலிங்கம், கோட்டாட்சியர்கள் ரமேஷ், சீனிவாசன், மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் முருகேசன், வட்டாட்சியர்கள் ரகுபதி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai