சுடச்சுட

    

    நெல்லை மாவட்டத்தில் இன்று 11 கிராமங்களில் அம்மா திட்ட முகாம்

    By திருநெல்வேலி,  |   Published on : 06th December 2013 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 வருவாய் கிராமங்களில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

    தமிழக முதல்வர் உத்தரவுப்படி வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கிராமங்களில் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் ஒரு வருவாய் கிராமம் தேர்வு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை (டிச. 6) முகாம் நடத்தப்படவுள்ளது.

    தெற்குப்பட்டி, பாளையங்கோட்டை பகுதி-2, தடியம்பட்டி, மத்தளம்பாறை, பெரியபிள்ளை வலசை, கூடலூர், வீராணம், புதுப்பட்டி 1, 2, அடைச்சாணி, விஜயநாராயணம் பகுதி-1, சமூகரெங்கபுரம் ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறும்.

    இம்முகாமில், அனைத்துத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு  வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்புச் சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்டவை தொடர்பாக மனுக்கள் பெற உள்ளனர்.

    எனவே, அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அவர்களது பகுதியில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai