சுடச்சுட

  

  பாளை.யில் டிச.12-இல் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

  By திருநெல்வேலி,  |   Published on : 06th December 2013 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாளையங்கோட்டையில் டிச. 12-ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

  திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொமுச அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஹெச்எம்எஸ் தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் பி. சுப்பிரமணியன் பேசியது:

  விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்பை அதிகரித்தல், சம வேலைக்கு சம ஊதியம், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையை எதிர்த்தல், உழைக்கும் தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 10 ஆயிரம், ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 11 மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

  இதன் ஒரு பகுதியாக டிச. 12-ஆம் தேதி புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெறுகிறது. இதே நாளில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  திருநெல்வேலியில் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் 12-ஆம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில், அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்பர் என்றார்.

  கூட்டத்தில், ஏஐடியூசி நிர்வாகிகள், சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள், தொமுச பேரவை நிர்வாகிகள், ஏஐசிசிடியூ நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai