Enable Javscript for better performance
மாநில அறிவியல் கண்காட்சிக்கு சங்கர்நகர் பள்ளி மாணவி தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    மாநில அறிவியல் கண்காட்சிக்கு சங்கர்நகர் பள்ளி மாணவி தேர்வு

    By திருநெல்வேலி,  |   Published on : 06th December 2013 02:54 AM  |   அ+அ அ-   |    |  

    தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு, சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப் பள்ளி மாணவி தேர்வு பெற்றுள்ளார்.

    மாணவி எஸ். விக்னேஸ்வரி, வேகத்தடையில் மின்சாரம் தயாரிக்கும் எம்.எப். ஜெனரேட்டரை உருவாக்கியுள்ளார். கல்வி மாவட்டம், மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிகளில் இவரது படைப்புக்கு முதலிடம் கிடைத்தது.

    இதையடுத்து, மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிக்கு எம். விக்னேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறப்பிடம் பெற்ற மாணவியை, பள்ளிச் செயலர் ஆர். ஏகாம்பரம், தலைமையாசிரியர் உ. கணேசன், உதவித் தலைமை ஆசிரியர் ஆ. ரங்கநாதன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    kattana sevai