சுடச்சுட

  

  முதுநிலையில் புதிய கருத்தியல்களுடன் பாடத்திட்டம்

  By திருநெல்வேலி,  |   Published on : 06th December 2013 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இளநிலையில் கற்றது முதுநிலையில் தொடராத வகையில் புதிய கருத்தியல்களுடன் பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என, திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்மொழி இலக்கியக் கல்வி பாடத்திட்ட உருவாக்கம் குறித்த பயிலரங்கில் வலியுறுத்தப்பட்டது.

  திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை  சார்பில், தமிழ்மொழி இலக்கியக் கல்வி பாடத்திட்ட உருவாக்கம் குறித்த பயிலரங்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது. பல்வேறு பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகளில் இருந்து பாடத்திட்டக் குழு உறுப்பினர்கள் 60 பேர் பங்கேற்றனர்.

  15 வல்லுநர்கள் பங்கேற்றுப் பேசினர். 3 அமர்வுகள், ஒரு குழு விவாதம், திட்ட  வரைவுகள் உருவாக்கம் என பயிலரங்கில் பல்வேறு கருத்துகள் ஆலோசிக்கப்பட்டன.

  பொதுத் தமிழ்ப் பாடங்களில் காலத்தின் தேவைக்கு ஏற்ப தாள்களும், உட்கூறுகளும்  அமைய வேண்டும். பயன்படு மொழியாகத் தமிழை ஆக்கும் நோக்கத்தில் செய்முறை வகுப்புகள், களநிலை சார்ந்த பயிற்சிகள், சொல் தொகுதிகள் உருவாக்கம், துறைசார் கலைச்சொற்கள் உருவாக்கம் போன்றவை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இளநிலைப் பாடத்திட்டமும், முதுநிலைப் பாடத்திட்டமும் தனித்தனியாக அமையாமல் தவிர்ப்பது, இளநிலையில் படித்ததைத் திரும்பவும் முதுநிலையில் தொடராமல் புதிய கருத்தியல்களுடன் பாடத்திட்டம் உருவாக்க இந்தப் பயிலரங்கம் மூலம் வலியுறுத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

  பயிலரங்கில் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆ.கு.குமரகுரு சிறப்புரையாற்றினார். தமிழியல் துறைத் தலைவர் அ.ராமசாமி, இந்திய மொழிகளின் மைய நிறுவனத்தின் முனைவர் இளங்கோவன், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முனைவர் த.பரசுராமன், கிழக்குப் பதிப்பகம் பத்ரிசேஷாத்ரி, ஆழிப் பதிப்பகம் செந்தில்நாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai