சுடச்சுட

  

  வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவில் பிழைகளை சரி செய்ய வாய்ப்பு

  By திருநெல்வேலி  |   Published on : 06th December 2013 02:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவில் பிழைகள் ஏதேனும் இருந்தால் அதனை சரிசெய்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டு அனைத்து பதிவுதாரர்களின் விவரங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

  இந்த வசதியைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள் அனைவரும் தங்களது பதிவு விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், பதிவு அடையாள அட்டையின் நகலினையும் இணையதளம் மூலம் உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

  பதிவுதாரர்கள் தமது பதிவு விவரங்களைச் சரிபார்க்கும்போது காணப்படும் எழுத்துப் பிழைகள், பதிவு விடுபாடுகள், பதிவு மூப்பு, திருத்தங்கள் என்று ஏதேனும் அறியப்படின் அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதிவு விவரங்கள் சரிசெய்யும் நடவடிக்கை படிப்படியாக ஒவ்வொரு கல்வித்தகுதி வாரியாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  எஸ்.எஸ்.எஸ்.சி. தவறியவர்கள், 8-ஆம் வகுப்பு தவறியவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகிய கல்வித் தகுதி உடைய பதிவுதாரர்கள் தங்களது பதிவு விவரங்களை இணையதளத்தில் பார்த்து, அதில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை சரிசெய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பிழைகளைச் சுட்டிக்காட்டி 15-12-2013-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

  விண்ணப்பிக்கும்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை (கையெழுத்துப் பிரதி), இணையதளம் மூலம் பெறப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள சான்றுகள், குடும்ப அடடை, சாதிச் சான்று ஆகியவற்றின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai