சுடச்சுட

  

  79 போலீஸாருக்கு சிறப்பு எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு

  By திருநெல்வேலி  |   Published on : 06th December 2013 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர்கள் 79 பேருக்கு சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

  மாநகரக் காவல் துறையில் பணிபுரிந்தவர்களுக்கு துணை ஆணையர் சுரேஷ்குமாரும், மாவட்டக் காவல் துறையில் பணிபுரிந்தவர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரியும் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். ஆயுதப்படையில் பணிபுரிந்த 5 தலைமைக் காவலர்கள், மாநகர நுண்ணறிவுப் பிரிவில் பணிபுரிந்த 38 தலைமைக் காவலர்கள், மாவட்டத்தில் பணிபுரிந்த 36 தலைமைக் காவலர்கள் இதன் மூலம் பதவி உயர்வு பெற்றுள்ளனர். எஸ்பி-யின் தனிப்பிரிவில் பணியாற்றியோருக்கும் இந்த பதவி உயர்வு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai