சுடச்சுட

  

  அதிமுகவினர் துண்டுப்பிரசுரம் விநியோகம்

  By திருநெல்வேலி  |   Published on : 07th December 2013 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அதிமுக மாணவரணி சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்கள் பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

  நிகழ்ச்சிக்கு, மாநகர் மாவட்ட மாணவரணிச் செயலர் ஜெரால்டு தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலர் முத்துகருப்பன், துண்டுப்பிரசுர விநியோகத்தைத் தொடங்கிவைத்தார்.

  இந்தத் துண்டுப்பிரசுரத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச மடிக்கணினி, இலவச சைக்கிள் திட்டங்கள், மகளிர் நலன் காக்கும் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டிருந்தது.

  நிகழ்ச்சியில், ஜெயலலிதா பேரவை நிர்வாகி சுதா கே.பரமசிவன், மாமன்ற உறுப்பினர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட துணைச் செயலர் மூர்த்தி, பாளை நகர கூட்டுறவு வங்கித் தலைவர் டால்சரவணன், பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் எம்.சி.ராஜன், நெல்லை மண்டலத் தலைவர் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai