சுடச்சுட

    

    அம்பேத்கர் நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

    By திருநெல்வேலி,  |   Published on : 07th December 2013 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜபெருமாள் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்டச் செயலர் மனோகர், மண்டலத் தலைவர்கள் ஐயப்பன், முருகபெருமாள், சண்முகராஜ், வழக்குரைஞர் வேல்முருகன், எம்.சிவராமன், முருகபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேல்துரை, சுத்தமல்லி முருகேசன், கே.பிச்சாண்டி, சங்கரபாண்டியன், சோமு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பாரதிய ஜனதா கட்சி: பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. பிரிவு சார்பில் மாவட்டத் தலைவர் ஏ.முத்துபலவேசம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஜி.முருகதாஸ், மாவட்ட துணைத் தலைவர் பி.அருள்ராஜ், மாவட்டப் பொதுச்செயலர் எஸ்.வி.குருசாமி, பி.மகேந்திரன், வி.மாரியப்பன், திருநெல்வேலி மண்டலத் தலைவர் எம். பரமசிவன், மானூர் ஒன்றியத் தலைவர் எம்.திருவாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தமமுக: தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், திருநெல்வேலி மாநகர மாவட்டச் செயலர் எஸ்.கே.டி.கண்மணி மாவீரன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    மாநிலப் பேச்சாளர் எட்வின், மண்டலச் செயலர்கள் அழகர்சாமி, மாநகர மாவட்டத் தலைவர் வீ.அந்தோனிஅன்பரசன், நெல்சன், பொட்டல் பி.கண்ணன், ஜி.துரைப்பாண்டியன், ஜி.வி.பெருமாள் பாண்டியன், என்.கலையரசன், ஈ.பால்ராஜ், டி.சின்னதுரை, எஸ்.ஆறுமுகம், எஸ்.எம்.டி.முத்து, எஸ்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    புதிய தமிழகம் கட்சி: புதிய தமிழகம் கட்சி சார்பில் மாநகர மாவட்டச் செயலர் எம்.எஸ்.செல்லப்பா தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புறநகர் மாவட்டச் செயலர் வீரா அரவிந்தராஜா, பாளை. தொகுதி பொறுப்பாளர் கே.நடராஜன், பாளை ஒன்றியச் செயலர் ஏ.ராமச்சந்திரன், மானூர் ஒன்றியச் செயலர் எஸ்.ஆவடிமுருகன், எஸ்.ரவி, எம்.வி.பாலமுருகன், சி.மணிகண்டன், ஏ.எஸ்.முத்து, வி.சுடலைமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தமிழ்ப்புலிகள்: தமிழ்ப்புலிகள் அமைப்பு சார்பில் திருநெல்வேலி தெற்கு மாவட்டச் செயலர் வே.தமிழ்ச்செல்வன், மேற்கு மாவட்டச் செயலர் வெ.தமிழ்வளவன் ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நெல்லை மாயா, க.தமிழரசு, ப.தமிழ்மாறன், க.அறிவரசு, க.முத்துகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பிற அமைப்புகள்: இந்து மக்கள் கட்சி சார்பில் அக் கட்சியின் மாவட்டப் பொதுச் செயலர் எஸ்.எஸ்.எஸ்.மணி, மாவட்டத் தலைவர் உடையார், மாநகர் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் கண்ணன் ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, தாழ்த்தப்பட்டோரை திருக்குலத்தோர் என அழைக்கக் கோரி உறுதிமொழி ஏற்கப்பட்டது. தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் அதன் மாவட்டச் செயலர் முருகன் தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் மாவட்டச் செயலர் அமுதா மதியழகன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

        இதேபோல ஆதித்தமிழர் பேரவை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai