சுடச்சுட

  

  திருநெல்வேலி நகரம் சந்திபிள்ளையார் கோயில் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 84 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

  அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது.

  மறியலுக்கு, இந்து முன்னணியின் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் பாலாஜி கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வெட்டும்பெருமாள், மாவட்டச் செயலர்கள் வேல்ஆறுமுகம், பாலன், செயற்குழு உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மாயகூத்தன், செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ், கலைஷ்குமார், நகரத் தலைவர் மாரியப்பன், சரவணன், வினோத், இசக்கிமுத்து, சுரேஷ், சந்தானராஜ் உள்ளிட்டோர் மறியலில் பங்கேற்றனர்.

  மறியலையொட்டி திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையர் லோகநாதன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மறியலில் பங்கேற்ற 84 பேரை போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

  பாளை.யில் 6 பேர் கைது: அயோத்தில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி, பாளையங்கோட்டையில் விநாயகரிடம் மனு அளிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்து மகா சபையின் தலைவர் குமரேசன் உள்பட 6 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai