சுடச்சுட

    

    ஓய்வு பெற்ற தலைமையாசிரியை தலை துண்டித்துக் கொலை

    By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 07th December 2013 04:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியை தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார்.

    சாயர்புரம், ஏற்காடு தெருவைச் சேர்ந்த ஏகாம்பரம் மனைவி ஞானதீபம் பரிமளவல்லி (61) . ஓய்வுபெற்ற தலைமையாசிரியை. இவரது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் இவர் சாயர்புரத்தில் தனியாக வசித்துவந்தார். வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் ஞானதீபம் பரிமளவல்லியின் செல்போன் எண்ணுக்கு தூத்துக்குடியில் உள்ள அவரது சகோதரர் ஞானசிகாமணி செல்வராஜ் தொடர்புகொண்டாராம்.

    நீண்டநேரமாகியும் செல்போனை எடுக்காததால், பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது உறவினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக, அவர் ஞானதீபம் பரிமளவல்லியின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர் நாற்காலியில் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாராம்.

    தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. துரை, ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. ராமராஜன், சாயர்புரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், உதவி-ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார், எதற்காக கொலை செய்தார்கள் என்ற எந்த விவரமும் உடனடியாகத் தெரியவரவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai