சுடச்சுட

  

  சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  By திருநெல்வேலி,  |   Published on : 07th December 2013 04:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாளையங்கோட்டையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஜனநாயக அங்காடிகள் சுமைதூக்குவோர் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் (ஏஐசிசிடியூ) சார்பில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

  பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள திருநெல்வேலி மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐசிசிடியூ மாநிலத் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் ரமேஷ், ஏ.வைகுண்டராஜன், மண்டல நிர்வாகிகள் ரங்கன், முருகன், இசக்கி, உடையார், ராயப்பன், மணி, அன்பழகன், காந்தி, நாராயணன், மாரிமுத்து, ஜெயக்குமார், முருகன், மூக்கையா, கணேசன், பரமசிவன் உள்பட 150-க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai