சுடச்சுட

    

    செங்கோட்டை அருகே தெற்குமேட்டில் குடும்பத் தகராறு காரணமாக ஆசிரியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    செங்கோட்டை அருகே தெற்குமேடு அங்கன்காலடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர்  ஆ.முருகையா (45). இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவருடைய வீட்டுக்கு அருகில் மா.காளி (55) என்பவர் வசித்து வருகிறார். இருவரும் உறவினர்கள்.

    இந்நிலையில், வியாழக்கிழமை காளி, முருகையாவின் தாயிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. உடனே முருகையா, காளியிடம் சென்று தட்டிக்கேட்டாராம். அப்போது காளி, முருகையாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த  முருகையா, செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

    இதுகுறித்து புளியரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai