சுடச்சுட

  

  திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் சனிக்கிழமை (டிச.7) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

  இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி நகர்ப்புறம் செயற்பொறியாளர் அ.ப.சேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (டிச.7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது. அதன்படி கொக்கிரகுளம், திருநெல்வேலி சந்திப்பு, மீனாட்சிபுரம், மணிமூர்த்தீஸ்வரம், உடையார்பட்டி, சிந்துபூந்துறை, சேந்திமங்கலம், முருகன்குறிச்சி, திருவனந்தபுரம் ரோடு, வடக்கு, தெற்கு பைபாஸ் ரோடு, வண்ணார்பேட்டை, குருந்துடையார்புரம், அம்பை ரோட்டின் மேற்கு பகுதிகளில் (மெயின் பஜார், நேதாஜிரோடு, குறிச்சி, நத்தம், குட்டி மூப்பன் தெரு, காஜா நாயகம் தெரு, அத்தியடி தெரு) மின்சாரம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai