சுடச்சுட

  

  தொல்காப்பிய இலக்கணக் கோட்பாடு வளர்ச்சி பயிலரங்கம்: டிச. 10 தொடக்கம்

  By திருநெல்வேலி  |   Published on : 07th December 2013 04:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி ராணிஅண்ணா மகளிர் கல்லூரியில் தொல்காப்பிய எழுத்து சொல் இலக்கணக் கோட்பாடு வளர்ச்சி பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை (டிச. 10) தொடங்கி 10 தினங்கள் நடைபெறுகிறது.

  திருநெல்வேலி ராணிஅண்ணா மகளிர் கல்லூரி தமிழ்த்துறை, சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் இப்பயிலரங்கம் தொடக்கவிழா செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு  நடைபெறுகிறது.

  இப்பயிலரங்கில் தமிழறிஞர்கள் முனைவர் ச.வே. சுப்பிரமணியன், முனைவர் சு. அழகேசன், வெ. சுயம்பு, சு. அருள்மணி, வே. மாணிக்கம், து. சேதுராமபாண்டியன், ஏ. ஆதித்தன், ரா. கீதா, க. நர்மதா, சு. மகாலட்சுமி, க. கந்தன், செ. கஸ்தூரி, முனைவர். இ. முத்தையா உள்பட பலர் பங்கேற்கின்றனர். பயிலரங்க நிறைவு விழா வியாழக்கிழமை(டிச.19) மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai