சுடச்சுட

  

  பள்ளி மாணவர்களுக்கான இலவச ஓவியப் பயிற்சி

  By திருநெல்வேலி  |   Published on : 07th December 2013 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இலவச ஓவியம், ஹிந்தி, யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

  பள்ளி கல்விச் சங்கம் சார்பில் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் இலவசமாக ஓவியப் பயிற்சி, ஹிந்தி கற்பித்தல், யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கல்விச் சங்கத் தலைவர் எஸ். மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்து, பயிற்சியைத் தொடங்கிவைத்தார்.  கல்விச் சங்கப் பொருளாளர் தளவாய்ராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பி.டி. சிதம்பரம், ரா. சுரேஷ் வாழ்த்திப் பேசினர். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஹிந்தி புத்தகம், எழுதுபொருள்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தமிழாசிரியர் வை. சிவசங்கரன் தொகுத்து வழங்கினார்.  கல்விச் சங்கச் செயலர் மு. செல்லையா வரவேற்றார். தலைமையாசிரியர் கு. அழகியசுந்தரம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai