சுடச்சுட

  

  திருநெல்வேலி அருகே நடுக்கல்லூரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை பிரசார யாத்திரை தொடங்கியது.

  பாரதிய ஜனதா கட்சி சார்பில் டிச. 1-ம் தேதி முதல் வரும் 22-ம் தேதி வரை வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை எனும் பிரசார பாதயாத்திரை நடைபெற்று வருகிறது.

  வாஜ்பேயி தலைமையிலான பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லுதல், நரேந்திரமோடி தலைமையில் மத்திய பாஜக ஆட்சி அமைய வேண்டும் என வலியுறுத்தி பிரசாரம் செய்யப்படுகிறது. மானூர் ஒன்றியம், நடுக்கல்லூரில் துர்க்கை அம்மன் கோயிலில் கொழு பூஜை, களப்பை பூஜை செய்து இப்பிரசார யாத்திரை தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் கிளைத் தலைவர் இருளப்பன் தலைமை வகித்தார். கிளைச் செயலர் எஸ். கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

  கட்சியின் மாவட்ட பொதுச்செயலர் எஸ்.வி. குருசாமி, மாவட்ட துணைத் தலைவர் வழக்குரைஞர் பெ. அருள்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம். நாராயணன், ஒன்றியத் தலைவர் எம். திருவாளி, துணைத் தலைவர் கே.எஸ். மணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். வாஜ்பேயி அரசின் சாதனைகள் விளக்க துண்டுப் பிரசுரங்கள் வீடு வீடாக  வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai