சுடச்சுட

  

  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உண்மை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

  ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொறுப்புக் குழுத் தலைவர் அ.அப்துல் வாஹித் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் என்.ஷாஜஹான், வீரவநல்லூர் நவாஸ் ஷெரீப், கோட்டூர் ஜலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுகவின் மாநிலச் செயலர் கோவை செய்யது கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன், நாம் தமிழர் கட்சியின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிவகுமார், வழக்குரைஞர் ப.செந்தில்குமார் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாவட்டப் பொறுப்பாளர் கோல்டன் காஜா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai